இன்று உலக வானொலி தினம்
ஐ.நா.வின் கல்வி , அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ )ஆண்டு தோறும் பிப்., 13-ம் தேதியை உலக வானொலி தினமாக கடைபிடிக்கிறது.
கடந்த 2011-ம் ஆண்டு ஐ.நா. 36-வது பொதுச்சபை கூட்டத்தில் முதன்முதலாக ஸ்பெயின் , நவம்பர் 3-ம் தேதியை உலக வானொலி தினமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியது.
அதன் பின்னர் பிப்ரவரி 13-ம் தேதியை உலக வானொலி தினமாக யுனெஸ்கோ அறிவித்தது..
பிரிட்டனின் மாக்ஸ்வெல், மைக்கேல் பாரடே எதிரொலி அடிப்படையில் மின்காந்த அலையை, ஒலி அலையாக மாற்றும் கருவியை கண்டறிந்தனர்.
பின் ஜெர்மனியின் ஹென்ரிச் ஹெர்ட்ஸ் மின்காந்த அலையை, டிரான்ஸ்மீட்டராக மாற்றினார். இத்தாலியின் குலீல்மோ மார்க்கோனி வானொலியை கண்டுபிடித்தார்.
டி.வி.மொபைல் , ஸ்மார்ட்போன், இன்டர்நெட் என பல வழிகளில் தகவல் தொடர்பு அதிகரித்துவிட்டபோதிலும், வெகுஜன ஊடகத்தின் (MASS MEDIA) முன்னோடி வானொலி தான்.
முந்தைய காலங்களில் பேரிடர் குறித்த தகவல்கள், போர் அறிவிப்புகள் போன்றவற்றினை ஒலிப்பரப்பு வாயிலாக விரைந்து அளித்தது வானொலி.
அப்படி இன்றளவும் விரைந்து ஒரு தகவலினை அளிக்கும் சாதனம் வானொலி என்றால் அது மிகையாகாது.