இன்று உலக பூமி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 22ம் தேதி பூமி தினமாக கொண்டாடப்படுகிறது. சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

பூமியின் வெப்பநிலை இதே வேகத்தில் அதிகரித்தால் இன்னும் 20 ஆண்டுகளில் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

கடந்த நுாற்றாண்டில் மட்டும் உலகின் வெப்பம் 0.74 டிகிரி அளவுக்கு உயர்ந்துள்ளது .

'நமது சக்தி - நமது பூமி' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

பிரபஞ்சத்தில் அனைவருக்கும் இருக்கும் ஒரே வீடு பூமி. நம்மை சுமக்கும் பூமியை, பாதுகாப்பது நமது கடமை. இதனை சேதப்படுத்தினால், வருங்கால சந்ததி வாழ வழியிருக்காது.

தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் கார்பன் அளவு, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

இதனை குறைக்க வேண்டுமெனில், மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.