இன்று சர்வதேச சுற்றுலா நெகிழ்திறன் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா., சார்பில் பிப். 17ல் சர்வதேச சுற்றுலா நெகிழ்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சுற்றுலா நெகிழ்திறன் பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்குவது இந்தத் தினத்தின் நோக்கமாகும்.
சுற்றுலா கொண்டாட்டத்தின் ஒரு பகுதி மட்டுமல்ல. இது பல்வேறு கலாசாரம் உடைய உலகை ஒன்றிணைக்கிறது.
சுற்றுலாத்துறை உலகில் லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை வழங்குகிறது.
வளரும் நாடுகள், நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் வருவாய், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் உள்ளிட்டவைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
நெருக்கடி, பேரிடர் உள்ளிட்ட சவால்களில் இருந்து சுற்றுலாத்துறையை மீட்க, நிலைத்தன்மையுடன் இருக்க வலியுறுத்தி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.