இன்று உலக நன்செய் நிலங்கள் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் பிப்., 2 ஆம் தேதி உலக நன்செய் நிலங்கள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது

அதிகம் நீர் வசதி உள்ள விவசாய பகுதிகள் நன்செய், ஈர நிலங்கள் என அழைக்கப்படுகின்றன.

இதில் நெல், கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.

மக்களுக்கும், பூமிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'நன்செய் நிலமும் பாரம்பரிய அறிவும்: கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

கடந்த 1900 ஆம் ஆண்டு முதல் சுமார் 64 சதவீதம் உலகின் நன்செய் நிலங்கள் அழிந்துவிட்டன. உலகில் 8ல் ஒருவர், வாழ்வாதாரத்துக்கு நன்செய் நிலத்தை நம்பி உள்ளனர்.

கடற்கரையோரம் வசிப்பவர்களில் 60 சதவீதம் பேரை புயல், சுனாமியில் இருந்து இவை பாதுகாக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாளில், நன்செய் நிலங்கள், குளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுக்காக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.