காய்ச்சலா.. சிகிச்சை தேவைப்படும் தருணங்கள் என்னென்ன?

தொற்று பாதிப்பு உட்பட பல்வேறு உடல் கோளாறுகளின் வெளிப்பாடே காய்ச்சல்.

உடலின் இயல்பான வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட், அதாவது 37 டிகிரி செல்ஷியஸ்.

உடல் வெப்பநிலையை மூளையின் அடிப்பகுதியில் உள்ள 'ஹைப்போதாலமஸ்' சீராக நிர்வகிக்கிறது.

உடல் செயல்பாடுகளில் ஏற்படும் தாக்கங்களை எதிர்கொள்ள வசதியாக, இயல்பான உடல் வெப்பநிலையில் இருந்து ஒன்றிரண்டு டிகிரியை ஹைப்போதாலமஸ் அதிகரிக்கச் செய்யும்.

இதனால்,ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லா குழந்தைகளுக்கும் காய்ச்சல் ஏற்படுவது இயல்பு.

104 டிகிரி செல்ஷியசிற்கு மேல் உடல் உஷ்ணம், தலையில் பலத்த அடி, தொடர்ந்து இதய செயலிழப்பு போன்றவை காய்ச்சலுடன் இருந்தால் உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும்.

காய்ச்சலுடன் இருக்கும் குழந்தையின் நடவடிக்கை குழந்தை பயத்துடன் இருப்பது, நீண்டகாலமாக நோய் பாதிப்பு, நீர்ச்சத்து குறைபாடு இருந்தாலும் டாக்டரிடம் செல்ல வேண்டும்.