சிறப்பான இரவு உறக்கத்துக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் போதும்!
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் படுக்கும் முன் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், உடல் வெப்பநிலையை குறைத்து தூக்கத்தை அதிகரிக்கக்கூடும்.
நமது மூளை 75% நீரால் ஆனது. நீரேற்றம் குறைவதால் மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மிட்டர்களின் சிக்னலை மாற்றும். எனவே ஒரு கிளாஸ் தண்ணீர் மூளையை புத்துணர்வாக்கும்.
இரவில் சுமார் ஆறு மணி நேரம் தூங்குபவர்கள், போதுமான அளவு நீரேற்றம் இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
படுக்கைக்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது நமது உறக்கநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
8 மணி நேர தூக்கத்திற்கு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீர் அருந்திவிட்டு படுக்க வேண்டும்.
வெது வெதுப்பான நீர் அல்லது கஃபைன் இல்லாத தேநீர் அருந்தும் போது உடல் சூட்டை அது ஒழுங்குபடுத்தும். அது உடலுக்கு தூங்குவதற்கான நேரம் என்று சமிக்ஞை செய்யும்.
அதேசமயம் இரவு தண்ணீர் அருந்துவது சிறுநீர் பையை நிரப்பிவிடும்; தூக்கம் பாதிக்காமல் இருக்க படுக்கும்முன் சிறுநீர் கழித்துவிட்டு, பின் 1 கிளாஸ் தண்ணீர் அருந்துங்கள்; தூங்கும் நேரத்தில் சிறுநீர் உற்பத்தி குறையும்.
அதேபோல் தினசரி படுக்கைக்கு ஒரே நேரம் செல்லுங்கள். இது உடல் கடிகாரத்தை ஒழுங்குப்படுத்தி, அர்ஜினைன் வாசோபிரசின் ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதனால் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க வேண்டிய தேவை இருக்காது.