கீழ்வாதம் பிரச்னையா... என்ன செய்யலாம்?
கீல்வாதம் என்பது வலிமிகுந்த ஒரு வகையான மூட்டுவலி. உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது, உங்கள் மூட்டுகளில் கூர்மையான படிகங்கள் உருவாகலாம்.
பெரும்பான்மையாக 40 முதல் 50 வயதை தொடும் ஆண், பெண்களுக்கு கீழ்வாதம் ஏற்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம் காரணமாகவும் ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகரிப்பாலும் மூட்டுகளில் ஒருவகையான உப்பு படிமானம் ஏற்பட்டு திடீரென மூட்டுகள் வீங்கி வலி ஏற்படும்.
மனக்கவலை, மன அழுத்தம் காரணமாகவும் உடல் எடை அதிகரிப்பாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக் கொள்வதோடு அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதை அதிகம் குடிப்பதன் மூலம் இந்த பாதிப்பு ஏற்படுவதை தடுக்கலாம்.
குளிர்காலத்தில் மிதமான சூட்டுடன் அதிக அளவு தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் சிறுநீர் வழியாக வெளியேறும்.
பிரச்னை உள்ளவர்கள் இறைச்சி, மீன், கடல்பாசி உண்பதை தவிர்க்க வேண்டும்.