பச்சை பட்டாணியின் ஆரோக்கிய நன்மைகள் இவை

பருப்பு வகையை சேர்ந்த பச்சை பட்டாணியில் வைட்டமின் ஏ, பி, சி, இ மற்றும் கே, பொட்டாஷியம், துத்தநாகம் ஆகியவை அதிகமாக உள்ளது.

பீன்சுடன் ஒப்பிடும்போது, இது குறைந்த கலோரி கொண்டது. இதில், கொலஸ்டிரால் இல்லை.

நம் உடலுக்கு தேவையான போலிக் அமிலம் மற்றும் பி-காம்ப்ளக்ஸ் டி.என்.ஏ, கட்டமைப்பில் முக்கிய பங்காற்றுகிறது.

இதிலுள்ள அதிக நார்ச்சத்து, ஜீரண சக்திக்கு உதவுகிறது. நல்ல பாக்டீரியாவை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்னையை போக்குகிறது.

இதய நோய்க்கு காரணமான கெட்ட கொழுப்பை, இதிலுள்ள விட்டமின் பி3 (நியாசின்) தடை செய்கிறது. இதய ரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை ஆன்டிஆக்ஸிடென்டுகள் தடுக்கின்றன.

பச்சை பட்டாணியில் உள்ள பொட்டாஷியம், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

இரும்பு சத்து மற்றும் தாமிரச் சத்துக்கள், ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

கர்ப்பிணி பெண்களுக்கும், கருவில் வளரும் குழந்தைகளுக்கும் மிகவும் நன்மை அளிக்கிறது.

அதேவேளையில், பச்சைப் பட்டாணியை அளவாக சாப்பிட வேண்டும் என்பதால், தினசரி எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பது டயட்டீயன்களின் அட்வைஸாகும்.