நாவல் பழ ஜூஸின் ஆரோக்கிய நன்மைகள்
வைட்டமின் ஏ மற்றும் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நாவல் பழத்தில் நிறைந்துள்ளன.
நாவல் பழ ஜூஸிலுள்ள நார்ச்சத்து, செரிமானத்தை மேம்படுத்த உதவும்; மலச்சிக்கலுக்கு தீர்வு தரும். ஜூஸுடன் உப்பு சேர்த்து அருந்த, வயிற்றுப் போக்குக்கு நிவாரணம் கிடைக்கும்
ஆன்டி ஆக்சிடென்ட்கள், பாலிபினால்கள் அடங்கியுள்ளதால் நாவல் பழ ஜூஸை குடித்து வர, ரத்த அழுத்தத்தை சீராக்குவதுடன், இதய நோய்களுக்கான அபாயத்தை குறைகிறது.
இது உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுவதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்ததாகும்.
இதில், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து அதிகமுள்ளதால், எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது.
இதிலுள்ள இரும்புச்சத்து உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
ரத்தச்சோகை உள்ளவர்களுக்கும், ரத்த இழப்பிலிருந்து மீண்டு வருபவர்களுக்கும் இது உகந்ததாகும்.
இதிலுள்ள வைட்டமின் சி சத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.