கூழாங்கல் நடைப்பயிற்சியின் ஆரோக்கிய நன்மைகளை அறிவோமா?

சாதாரண நடைபயிற்சியைக் காட்டிலும், அதிக நன்மைகளை அள்ளித் தருகிறது இக்கூழாங்கல் நடைபயிற்சி.

நம் உடலில் நரம்புகள் முடிவடைவது உள்ளங்கைக, உள்ளங்கால்களில் தான். அதன் காரணமாகவே கை தட்டுவதைக்கூட அழுத்தமாகத் தட்ட வேண்டுமென கூறப்படுகிறது.

செருப்பு இல்லாமல் நடக்கும்போது, கால்களிலுள்ள புள்ளிகள் துாண்டப்பட்டு, உடலுக்கும் மனதுக்கும் நன்மை கிடக்கிறது.

கூழாங்கற்கள் உருண்டையாக, வழவழப்பாக இருப்பதால், உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் பட்டதும், ஒரு இடத்தில்கூட நிற்காமல், அனைத்துப் பகுதிகளிலும் தொட்டு உருண்டு ஓடும்.

இதனால் கைகளுக்கும், கால்களுக்கும் அழுத்தம் சமமாகக் கிடைக்கிறது. வழுவழுப்பாக இருப்பதால் பாதத்தைப் பாதிக்காது.

கூழாங்கல்லில் நடப்பது உடலுக்குப் பயிற்சி மட்டும் அல்ல, ஆரோக்கியத்தையும் தருகிறது.

காலிலுள்ள நரம்புப் புள்ளிகள் மூலம் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், முதுகெலும்பு, கண், காது உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும் துாண்டப்படுகின்றன.

இதனால் அந்த உறுப்பின் செயல்பாடும் சீராகி உடல் ஆரோக்கியம் பெறும். கூழாங்கல் பாதையில் நடக்கும்போது, செருப்பு இல்லாமல் வெறும் காலோடு நடக்க வேண்டும்.

முதலில் நடக்கும்போது சற்று கடினமானதாக இருந்தாலும், பின் பழகிவிடும். முதலில் மெதுவாக நடக்க வேண்டும். ஒரு வாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக வேகத்தை அதிகரிக்கலாம்.

கூழாங்கல் பாதையில் ஒரு நாளைக்கு 15 முதல் 20 நிமிடங்கள் வரை நடந்தால் போதும். பல்வேறு நோய்கள் குணமடைய இந்நடைபயிற்சி முறை உதவுகிறது.