ஹெல்த்தியான குதிரைவாலி அரிசி சூப்
தேவையானப் பொருட்கள்: குதிரைவாலி அரிசி - 0.25 கப், பாசி பருப்பு - 1 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 6, பூண்டு - 5 பல், தக்காளி - 1, மிளகு, சீரகம், நல்லெண்ணெய் - தலா 1 டீஸ்பூன்.
பெருங்காய துாள் - 1 சிட்டிகை, முடக்கத்தான் கீரை அல்லது துாதுவளை அல்லது முருங்கை கீரை - தேவையானளவு, உப்பு, தண்ணீர், கொத்தமல்லி இலை - தேவையானளவு.
அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், சீரகம் போட்டு தாளிக்கவும். பின், பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
இதனுடன் தக்காளி, முடக்கத்தான் கீரை அல்லது துாதுவளை அல்லது முருங்கை கீரை சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின், மஞ்சள் தூள், பெருங்காய துாள், உப்பு சேர்க்கவும்.
தொடர்ந்து, ஊற வைத்துள்ள குதிரைவாலி அரிசி, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். அது சூப் பதத்திற்கு இருக்க வேண்டும். பின், குக்கரை மூடி, 5 விசில் விடவும்.
சூடு ஆறியவுடன் குக்கரை திறந்து கரண்டி அல்லது மத்தால் நன்கு கடைந்து, மிளகு துாள், கொத்தமல்லி இலை துாவி இறக்கினால் ஆரோக்கியமான குதிரைவாலி சூப் ரெடி.