ஹார்ட் அட்டாக் மற்றும் கார்டியாக் அரஸ்ட்... இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
உலகளவில் அதிக இறப்புகளில், ஹார்ட் அட்டாக் முதலிடத்தில் உள்ளது. இன்றைய வாழ்க்கை முறையே இதற்கு முக்கிய காரணம்.
உடல் இயக்கம் குறைவு, உடல் பருமன், அதிக எண்ணெய், ஜங்க் உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை, புகை மற்றும் மது பழக்கம் போன்றவை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு அதிகரித்து, இதயத்தை சேதப்படுத்தி விடுகிறது.
ஹார்ட் அட்டாக் என்பது நெஞ்சுவலி. கார்டியாக் அரஸ்ட் என்பது அட்டாக் ஏற்பட்டு சரி செய்ய முடியாமல், உச்சகட்டமாக காப்பாற்ற முடியாத நிலைக்கு செல்வது.
மன அழுத்தம், துாக்கம், உணவு முறை, உடற்பயிற்சி, உடல் பருமன், தவறான பழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வந்தால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
இதய நோய்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், சரியான விழிப்புணர்வும், புரிதலும் இருக்க வேண்டியது அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.