இளமையில் ஹார்ட் அட்டாக்… வாழ்வியல் மாற்றமா… 
        
இளம் வயதினருக்கு தற்போது பரவலாக எதிர்பாராமல் 'ஹார்ட் அட்டாக்' வருகிறது.
        
குடும்பத்தில் யாருக்காவது ஹார்ட் அட்டாக், இதயக் கோளாறுகள் இருந்தால்,  அந்த குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும். மரபியலும்  ஹார்ட் அட்டாக் வர ஒரு காரணம்
        
அமர்ந்தே வேலை, 'ஜங்க்' உணவுகள், போதுமான துாக்கம் இல்லாதது, மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு மரபியல் காரணியும் சேரும் போது, ஹார்ட் அட்டாக் வரும் அபாயம் பல மடங்கு அதிகம்.
        
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இல்லாவிட்டால், சிறியதாக இருக்கும் பிளாக் பெரிதாகி, விரிசல் ஏற்பட்டு, ரத்தக் குழாயை அடைப்பு ஏற்பட்டு எதிர்பாராமல் ஹார்ட் அட்டாக் வரலாம்.  
        
இளமையிலேயே சர்க்கரை கோளாறு,  இதயக் கோளாறு  இருப்பவர்கள், இத்துடன் சிகரெட் பழக்கமும் சேர்ந்தால், ஹார்ட் அட்டாக் அபாயம்  மிகவும் அதிகம். 
        
ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்தவர்கள் மலை ஏறினால், மீண்டும் வருவதற்கு 20 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன.  
        
ஆரோக்கியமான உணவு, ஏழு மணி நேரம் ஆழ்ந்த துாக்கம், வேலை, தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி என்று அனைத்தும் மிதமான அளவில் இருப்பது அவசியம்.  
        
நிறைய தண்ணீர் குடித்து, ரத்த அழுத்தம், சர்க்கரை இரண்டையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 
        
இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால், அமைதியான வாழ்க்கை முறைக்கு திரும்ப வேண்டும். 'ஸ்ட்ரெஸ்' இல்லாமல் பார்த்துக் கொள்வது முக்கியம்.