இந்த செப்டம்பரில் விசிட் செய்ய ஏற்ற சில கடற்கரைகள் இதோ !
தர்கர்லி கடற்கரை, மகாராஷ்டிரா...பவளப்பாறைகள், அமைதியான சூழலுக்கு பெயர் பெற்றது இது. செப்டம்பரில் மிக அமைதியாக இருக்கும். ஸ்கூபா டைவிங் வித்தியாசமான அனுபவம் தரும்.
பலோலம் கடற்கரை, கோவா... இது இந்தியாவின் மிக அழகான, அமைதியான கடற்கரைகளில் ஒன்றாகும். தண்ணீர் சாகச விளையாட்டுகளில் அசத்தலாம்.
ஓம் கடற்கரை, கோகர்னா... கர்நாடகாவிலுள்ள இக்கடற்கரை பருவமழைக்கு பின் வரும் நாட்களில் வெகுவாக கவரும். இங்குள்ள மலைகளில் டிரெக்கிங் செய்யலாம்.
மராரி கடற்கரை, கேரளா... பனை மரங்கள், மென்மையான மணல், கூட்ட நெரிசல் இல்லாத கடற்கரை என்றால் இது சிறந்த சாய்ஸாகும்.
மந்தர்மணி கடற்கரை, மே.வங்காளம்... இந்தியாவின் கிழக்கே மிக சுத்தமான, அமைதியான கடற்கரைகளில் ஒன்று. செப்டம்பரில் பருவமழை குறைந்து காற்று புத்துணர்ச்சியுடன் வீசும்.
வர்கலா கடற்கரை, கேரளா... பருவமழைக் காலத்திற்கு பின் புதுப்பொழிவுடன் காட்சிதரும் இது. இங்கு யோகா, ஆயுர்வேத மசாஜ் என ஆரோக்கியமாக கழிக்கலாம்.
கோவளம் கடற்கரை... கேரளாவின் சொர்க்கம் இது எனலாம். பருவமழைக்கு பின் அரபிக்கடல் விரிந்த இக்கடற்கரை மெய்சிலிர்க்க வைக்கும்.