பாலில் கலப்படத்தை கண்டுபிடிக்க இதோ ஈஸி டிப்ஸ்
ஒரு தட்டு அல்லது டைல்ஸ் மீது சிறிது பாலை ஊற்றினால், சாதாரண பால் அடர்த்தியாகவும், மெதுவாகவும், தண்ணீர் கலந்திருந்தால் மிக வேகமாகவும் செல்லும்.
பாலில் சிறிது சோயாபீன் பவுடரைச் சேர்த்தால், தூய்மையான பாலின் மணம் மாறாது. ஆனால் யூரியா கலந்த பால், அம்மோனியா போன்ற வாசனையைத் தரக்கூடும்.
சிறிதளவு பாலில் 2 சொட்டு அயோடின் சேர்த்தால், பாலின் நிறம் மாறாது. ஆனால் ஸ்டார்ச் கலந்த பால், நீலம் அல்லது கருப்பு நிறமாக மாறும்.
சிறிது தூய்மையான பாலுடன் தண்ணீர் சேர்த்து பாட்டிலில் குலுக்கினால், குறைந்தளவில் நுரை வரும். ஆனால், டிடர்ஜென்ட் கலந்திருந்தால் அதிக நுரை உருவாகி நீண்ட நேரம் இருக்கும்.
செயற்கை பாலைக் கண்டறிய... உள்ளங்கையில் சாதாரண பாலை வைத்து தேய்த்தால், மென்மையாகவும் இயற்கையாகவும் இருக்கும்.
ஆனால், செயற்கை அல்லது கலப்பட பால் சோப்பு போல், வழுவழுப்புடனும், செயற்கையாகவும் தோன்றும்.
இவை துவக்க நிலை அறிகுறிகள் தான். பாலின் கலப்படத்தை முழுமையாக கண்டுபிடிக்க ஆய்வக பரிசோதனை அவசியமாகும்.