சரும பாதிப்புகளை தவிர்க்க இதோ சில டிப்ஸ்
தேவையற்ற அழகு சாதன பொருட்களை பயன்படுத்த கூடாது.
வெளியில் செல்லும்போது துரித உணவு, பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
வெதுவெதுப்பான நீரில் தினமும் இருவேளை குளிக்க வேண்டும்.
முடிந்த வரை அதிக வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தண்ணீரை அதிகமாக பருகுவதோடு, பழங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள், கீரை, காய்கறிகளை அதிகளவில் சாப்பிடுவது நல்லது.
காற்றோட்டமுள்ள தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
விஷப் பூச்சிகள் கடித்து தடிப்புகள், அரிப்பு உள்ளிட்ட தோல் சம்பந்தப்பட்ட பிரச்னை ஏற்பட்டால் ஏதாவது கிரீம்களை தேய்ப்பது தவறு. உரிய தோல் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.