விடுமுறை முடிஞ்சாச்சு.. குழந்தைகள் பற்களை மறக்காதீர்கள்...

குழந்தைகளுக்கு விடுமுறையில் உணவுப்பழக்கத்தில் உள்ள மாறுதல்களால் பற்களில் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

விடுமுறையில் பயணம் செல்லும் போது பற்களை கவனிப்பதும் குறைந்துவிடும். இவை அனைத்தும் சேர்ந்து பற்களை கொஞ்சம் சேதப்படுத்தி இருக்கலாம்.

சரியான நேரத்தில் கண்டுபிடித்தால் சிறிய சிகிச்சை அல்லது சிகிச்சை செய்யாமலேயே சரிசெய்து விடலாம். பற்களும் ஈறுகளும் சுத்தமாக உள்ளதா என பார்த்துக் கொள்ளுங்கள்.

விளையாடும் போது விழுந்தாலோ அடிபட்டிருந்தாலோ பற்கள் உடைந்துள்ளனவா என பல் டாக்டரிடம் காட்டி சோதனை செய்ய வேண்டும்.

விடுமுறையின் போது பல்வரிசை சீரமைப்பு சிகிச்சை செய்ய ஆரம்பித்தவர்கள் பள்ளி செல்லும் போது, அதற்குரிய டூத்பிரஷ் வைத்து சரியாக சுத்தம் செய்ய வேண்டும்.

பகல் மட்டுமல்ல இரவிலும் பல்துலக்க வேண்டும். சாப்பிட்டவுடன் தண்ணீரால் கழுவும் பழக்கத்தை வழக்கமாக்க வேண்டும்.

சத்தான உணவு, முறையான சுத்தம், சரியான பராமரிப்பு இவை மூன்றும் இருந்தால் பற்களும் வாயும் அதன்மூலம் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.