ஹோமியோபதி குணப்படுத்தும் நோய்கள் குறித்த சில புரிதல்கள்...
ஹோமியோபதி மருத்துவம் 200 ஆண்டுகள் பழமையானது. இந்த மருத்துவ முறை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மருத்துவமாக அறியப்படுகிறது.
தனி நபருக்கே உரித்த, உடல் நலன், மனநிலை, வாழ்க்கை சூழல் மீது முழு கவனம் செலுத்தி சிகிச்சை வழங்கப்படுகிறது. பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என கூறப்படுகிறது.
இதில் உயர் ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், உயர் ரத்த கொலஸ்ட்ராலுக்கு பக்கவிளைவுகளற்ற நல்ல மருந்துகள் உள்ளன என ஹோமியோபதி டாக்டர்கள் கூறுகின்றனர்.
இந்நோய்களுக்கு பல ஆண்டுகள் ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டவர்கள் ஹோமியோபதியில் சிகிச்சை பெற விரும்பினால் ஆங்கில மருந்து உட்கொள்வதை நிறுத்தக்கூடாது.
எற்கனவே உட்கொள்ளும் ஆங்கில மருந்தோடு சேர்த்து ஹோமியோபதி மருந்தையும் ஆரம்பிக்க வேண்டும்.
அடுத்து வரும் மாதங்களில் டாக்டரின் ஆலோசனைப்படி ஆங்கில மருந்தின் வீரியத்தை குறைத்து உடல்நலம் தேறுவதற்கு ஏற்ப அதை நிறுத்தலாம்.
மன அழுத்தம், பயம், துாக்கம் போன்ற மன நோய்களுக்கும், மனம் மட்டும் அல்லாமல் பல உடல் ரிதியான பிரச்னைகளுக்கும் மருத்து உள்ளதாக ஹோமியோபதி டாக்டர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக நுரையீரல் தொற்று மாதிரியான பிரச்னைகள், சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று, பித்தப்பை கற்கள், நரம்பு சோர்வு போன்ற பிரச்னைகளுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.