குழந்தைகளை எவ்வளவு நேரம் பொமைல் போன் பார்க்க அனுமதிக்கலாம்?

அதிக நேரம் மொபைல் பார்க்கும் குழந்தைகளின் மூளையை எம்.ஆர்.ஐ., ஸ்கேன் செய்யும் போது, வளர்ச்சி குறைபாடுகள் இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.

துாங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மொபைல் போன் பார்க்க, குழந்தைகளை அனுமதிக்கவே கூடாது.

மொபைல் போனிலிருந்து வரும் ஊதா வெளிச்சம் துாக்கம் வருவதற்குத் தேவையான மெலோடோனின் உற்பத்தியை குறைத்து, துாக்கம் வருவதைத் தடுத்து விடும்.

30 வினாடிகளுக்கு ஒரு ரீல்ஸ் என தொடர்ந்து பார்ப்பதால், டோபமைன் ஹார்மோன், 'பளிச் பளிச்' என்ற விளக்கு அணைந்து எரிவதைப் போன்று சுரக்கும்.

சில வினாடிகளுக்கு ஒரு முறை, புதிது புதிதாக பார்ப்பதில் ஏற்படும் மகிழ்ச்சிக்கே மூளை பழகி விடும்.

நாளடைவில், அரைமணி நேரம் கூட தொடர்ச்சியாக பள்ளி வகுப்பை கவனிக்க குழந்தைகளால் முடியாமல் போகும்; எரிச்சலடைவர்.

குழந்தையின் சிந்தனைத் திறனை மொபைல் போன் வெகுவாகக் குறைத்து விடுகிறது.

குழந்தையை வெளியே அழைத்துச் சென்று, பறவைகள், மனிதர்கள், மரம், வானம் என காட்டும் போது, புலன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்து, பார்க்கும் அனைத்தையும் கற்கும்.

அதே நேரத்தில், மொபைல் போனை கையில் கொடுத்தால், வெறுமனே அதைப் பார்க்குமே தவிர, எதையும் மூளையில் பதிய வைக்காது; கற்றுக் கொள்ளாது.

பிறந்தது முதல் மூன்று வயது வரையுள்ள குழந்தைகள், மொபைல் போனை பர்க்கவே கூடாது. 3 - 6 வயது வரையுள்ள குழந்தைகள், அதிகபட்சம் 1 மணி நேரம் பார்க்க அனுமதிக்கலாம்.

7 - 14 வயது வரையுள்ள குழந்தைகள் அதிகபட்சம், ஆன்-லைன் வகுப்புகளையும் சேர்த்து, 4 மணி நேரம் பார்க்கலாம்.

14 வயதுக்கு மேல், பெற்றோரின் கண்காணிப்புடன், அதிகபட்சம் 5 மணி நேரம், 'ஸ்கிரீன் டைம்' இருக்க வேண்டும்.