குழந்தைகள் ஒரு நாளுக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்?

பிறந்தது முதல், ஆறு மாதங்கள் வரை, தாய்ப்பால் மட்டுமே குடிக்க வேண்டும்.

ஒரு வயதிற்கு மேல், பசு பால் தரலாம்; கொதிக்க வைத்து, ஆற வைத்த பின் தர வேண்டும்.

வளரும் குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு, 750 மில்லி லிட்டர் பால் தரலாம்.

மூன்று - ஐந்து வயது வரை, 600 மில்லி லிட்டர் தேவைப்படும். அதன்பின், 400 மில்லி தரலாம். 13 - 18 வயது வரை, 600 மில்லி லிட்டர் குடிக்க வேண்டும்.

சைவ உணவு சாப்பிடுவோர், இந்த அளவை சற்று அதிகரித்துக் கொள்ள வேண்டும்.

எலும்புகள், தசைகளின் வளர்ச்சிக்கு, பாலிலுள்ள புரதம் மிகவும் அவசியம்.

பருப்பு உட்பட மற்ற புரத உணவுகள் சாப்பிட வேண்டும். ஆனால், வளரும் பருவத்தில், பால் புரதம் பிரதானமாக இருப்பது அவசியம்.