டிரெண்டிங்கில் உள்ள நகங்களின் கலர்புல் ஜாலங்கள்!
இன்றைய பேஷன் உலகில், ஹேண்ட்பேக், செருப்புக்கு மேட்சாக நெயில் பாலிஷ் போடுவதுதான் லேட்டஸ்ட் டிரெண்ட்!
நெயில் பாலிஷ், பெண்களின் அன்றாட அழகுக் கலையில் அத்தியாவசியப் பொருளாகிவிட்டது.
ஆனால், இந்த கலர்புல் ஜாலங்களுக்கு பின்னால் சில கவனிக்க வேண்டிய விஷயங்களும் இருக்கிறது. அவற்றை குறித்து பார்ப்போம்.
முதலில், நெயில் பாலிஷ் வாங்கும் போது, அதன் லேபிளை சரிபார்க்கவும். அதில் '3-ப்ரீ' அல்லது '5-ப்ரீ' என்று குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பாருங்கள்.
இதன் அர்த்தம், பார்மால்டிஹைட், டோலுன் போன்ற தீங்கு விளைவிக்கும் முக்கிய ரசாயனங்கள் இதில் இல்லை அல்லது குறைவாக உள்ளன என்பதாகும். இது நகங்களுக்கு நல்லது.
நெயில் ஆர்ட் உலகில், இப்போது சூப்பர் ஸ்டாராக இருப்பது, 'ஜெல் நெயில் பாலிஷ்' தான். பார்க்க பளபளப்பாகவும், நீண்ட நாட்கள் நீடித்தும் இருப்பதால், பலரும் இதை விரும்புகிறார்கள்.
ஆனால், ஜெல் பாலிஷ்களை அடிக்கடி பயன்படுத்துவதை, தவிர்த்து விடுங்கள். எப்போதாவது விசேஷங்களுக்கு பயன்படுத்தினால் போதும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அழகாக இருக்கிறது என்பதற்காக, நெயில் பாலிஷை வாரக்கணக்கில் நகத்திலேயே வைக்க வேண்டாம்.
எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் நெயில் பாலிஷை, ரிமூவ் செய்துவிட வேண்டும்.