நினைவு திறனை மேம்படுத்தும் தூக்கம்
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது அவசியம். சிறிய மாற்றங்கள் கூட மிகப்பெரிய வித்தியாசங்களை கொண்டு வரும்.
சமச்சீரான, ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றினாலே, உடல் எடையை 80 சதவீதம் கட்டுக்குள் வைக்கலாம்.
அன்றாட உணவு முறை சமச்சீரான ஊட்டச்சத்து மிக்கதாக இருந்தால், இதய நோய், நீரிழிவு, சில வகை கேன்சர் பாதிப்புகளை குறைக்கவும் உதவும்.
தினசரி உணவில் பழங்கள், காய்கறிகள், கீரைகள், மெலிந்த புரதங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை திட்டமிட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
துாக்கம் என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுக்குமே அவசியமானது. தினசரி 7- 8 மணி நேரம் வரை கண்டிப்பாக துாங்க வேண்டும்.
போதியளவு துாக்கம் இருந்தால் தான், நினைவுத்திறன் மேம்படும்; நோயெதிர்ப்பு அதிகரிக்கும்; உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும் என நேஷனல் ஸ்லீப் பவுண்டேஷனின் ஆய்வு கூறுகிறது.
ஆழ்ந்த துாக்கத்திற்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி, குறிப்பிட்ட நேரத்தில் விழிக்க வேண்டும்.
மன அழுத்தம் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. தியானம், யோகா, புத்தகம் படிப்பது போன்றவை மன அழுத்தம் இல்லாமலிருக்க உதவும். நாள்பட்ட மன அழுத்தம் இதய நோய்க்கு வழிவகுக்கும்.
உடலை நீரேற்றமாக வைத்திருப்பதும், எளிய உடற்பயிற்சிகள் செய்வதும் அவசியமானது.