மூட்டு வலிக்கு எப்படி தீர்வு காண்பது?
மூட்டு வலி இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்வது அவசியம்.
சிலர் சுயமாக தைலம், மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர்.
தைலம் தற்காலிகமாக வலியை போக்குமே தவிர நிரந்தர தீர்வாகாது.
வலி நிவாரணி மாத்திரை தொடர்ந்து எடுப்பதால் சிறுநீரகம் பாதிக்க வாய்ப்புள்ளது.
எலும்பு தேய்மானம் எந்த அளவுக்கு உள்ளது என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிய வேண்டும்.
தேய்மானத்தை பொறுத்து மாத்திரை அல்லது அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.
சிறுதானியங்கள், கீரை வகைகள், காய்கறிகள் அதிகம் உண்பது சிறந்தது.
இதனால் இளம் வயதில் மூட்டு வலி பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க முடியும்.