முதுமையில் வரும் வாசனை இழப்பு பிரச்னை!
70 வயதிற்குப் பிறகு வாசனை இழப்பு மிகவும் பொதுவானது. வாசனை நரம்பணுக்கள் படிப்படியாக குறைவது தான் காரணம்.
இது தவிர வேறு சில காரணங்களும் உண்டு. நரம்பு சிதைவு நோய்கள் என அறியப்படும் அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய்களுக்கு வாசனை இழப்பு ஒரு முக்கிய அறிகுறி.
நீண்டகாலமாக சுவாச ஒவ்வாமையும் ஒரு காரணம். சைனசிடிஸ் அல்லது கோவிட் தொற்றுக்குப் பிந்தைய உடல்நிலை மாற்றத்தினால்கூட இது நிகழலாம்.
சில நேரங்களில் இது நாம் உட்கொள்ளும் மருந்துகளால் கூட ஏற்படலாம். குறிப்பாக மன அழுத்த எதிர்ப்பு மருந்துகள் வாசனை இழப்பை ஏற்பட செய்யும்.
இது போன்ற பிரச்னைகளுக்கு எலுமிச்சை, ரோஜா மற்றும் யூகலிப்டஸ் போன்ற நறுமணங்களைப் பயன்படுத்தி வாசனை பயிற்சி அளித்து அதன் மூலம் சரிசெய்யலாம்.
இந்த பயிற்சியின் போது புகைப்பதை தவிர்க்க வேண்டும். உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பது அவசியம்.
'நாசல் அலர்ஜி', சைனஸ் தொந்தரவு இருந்தால் மருத்துவ முறையில் மற்றும் அறுவை சிகிச்சை முறையில் சரிசெய்யலாம்.