நுரையீரலின் ஆரோக்கியத்தை அறிவது எப்படி?

பொதுவாக நுரையீரல் ஆரோக்கியத்தை அறிய, மூச்சுத் திணறல், தொடர் இருமல், மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகளை கொண்டு தெரிந்துக்கொள்ளலாம்.

காற்றில் உள்ள துாசி, சிமென்ட், கட்டுமான கழிவுகள், வாகன புகை, தொழிற்சாலை புகை ஆகியவை நேரடியாக நுரையீரலுக்குள் நுழைகிறது.

ரத்த நாளங்களுக்குள் இவை சென்று, மாரடைப்பு, நுரையீரல் புற்றுநோயை போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

அதிக காற்று மாசு கொண்ட இடங்களுக்கு செல்லும் போது, முக கவசம் அணிவது அவசியம்.

சாதாரண சளி, இருமலில் தொடங்கி, காற்று மூலம் பரவக்கூடிய வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்றுகள் நுரையீரலை பாதிக்கிறது.

அதீதமாக நுரையீரல் பாதிக்கப்படும் போது, மூச்சு வாங்குவது, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது, காய்ச்சல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும்.

மாசற்ற காற்றை சுவாசிப்பது, மூச்சுபயிற்சி, யோகா செய்வது போன்றவற்றால், நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.