தாய்ப்பாலும் தாய்மார்களுக்கான ஆரோக்கிய உணவுகளும்!

தாய்ப்பாலுடைய கலவை ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆரம்பத்தில் சுரக்கும் தாய்ப்பாலில் (சீம்பால்) புரதம், நோய் எதிர்ப்புச் சத்துகள் நிறைந்திருக்கும்.

2 முதல் 5 நாட்கள் வரை இதுபோன்று பால் சுரக்கும். அதன் பின் 3 வாரங்கள் சுரக்கும் இடைநிலை பாலில் லாக்டோஸ் கொழுப்பு அதிகமாக இருக்கும்.

3 வாரம் முதல் 6 மாதம் வரை தாய்ப்பாலின் தன்மை சீராக இருக்கும். ஒவ்வொரு முறை பால் கொடுக்கும்போதும் அதன் தன்மை மாறுபடும்.

ஆரம்பத்தில் சுரக்கும் பாலில் லாக்டோஸ் நிறைந்துள்ளதால் குழந்தையின் தாகம் தணியும். இறுதியில் சுரக்கும் பாலில் கொழுப்பு நிறைந்துள்ளதால் குழந்தையின் பசியை போக்கி எடை அதிகரிக்க உதவும்.

தாய்ப்பால் நன்கு சுரக்க புரதம் நிறைந்த உணவுகள், இரும்புச்சத்து, கால்சியம், போலிக் அமில மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சோயா, பால், பட்டாணி, இறைச்சி, பருப்பு, முழுதானியங்கள், காய்கறி, பழங்கள் போன்ற உணவுகளை தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெந்தயம், கீரை, கசகசா, ஆரஞ்சு, பூண்டு, எள்ளு, முட்டை, பனீர், மீன், பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டால் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.

பால் கொடுக்கும் காலங்களில் குளிர்பானங்கள், துரித உணவுகளை தவிர்ப்பது நல்லது.