கேன்சரை ஆரம்ப நிலையில் அறிவது எப்படி? வரும் முன் காப்பது எப்படி?

உடம்பில் ஏதேனும் கட்டி இருப்பது, வாயில் வாரக்கணக்கில் புண் இருப்பது, எடையில் திடீர் குறைவு ஏற்படுவது, பசி எடுக்காமல் இருப்பது, மார்பகங்களில் கட்டி இருப்பது... போன்றவை முக்கிய அறிகுறிகள்.

இதுபோன்று இருந்தால், உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ஆண்டுகணக்கில் புகைப்பிடிப்பது, மது பயன்பாடு உள்ளவர்கள், இதற்கு முன் பழக்கம் இருந்தவர்கள், இதற்கான சி.டி.,ஸ்கேன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை எடுத்து பார்க்கலாம்.

மகளிருக்கு அதிகம் வரும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் இரண்டையும், எளிதாக முன்கூட்டியே கண்டறிய முடியும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை, முன்கூட்டியே 'பேஸ்மியர்' பரிசோதனை வாயிலாக கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம்.

25 வயதுக்கு மேல் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்ளலாம்; இது வெறும் ஐந்து நிமிட பரிசோதனை தான்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தற்போது தடுப்பூசி உள்ளது. பெண்கள் திருமணத்திற்கு முன், இந்த தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

உயர்நிலை வகுப்புகள் படிக்கும் போதே, பெண் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி விட வேண்டும்.