குழந்தைகளுக்கு உமிழ்நீர் அதிகபடியாக சுரக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வயதான காலத்தில் சிலருக்கு உமிழ்நீர் அதிகம் சுரக்கும் பிரச்னை இருக்கலாம். நரம்பியல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் இதற்கு காரணமாக இருக்கலாம்.

பொதுவாக குழந்தைகளுக்கு உமிழ்நீர் (salivary gland) முகத்தில் உள்ள மூன்று உமிழ்நீர் சுரப்பிகள் மூலம் உற்பத்தியாகும்.

இப்பகுதிகளில் படிமங்கள் ஏற்படுவது, உமிழ்நீர் சுரககும் நுண்ணிய நரம்புகளில் ஏற்பட்ட பிரச்னைகளால் தொடர்ந்து உமிழ்நீர் சுரக்கும் நிலை இருக்கும்.

அதனால் உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்பட்டுள்ள அலர்ஜி, படிம கற்களை பரிசோதனை மூலம் கண்டறிந்து அகற்ற வேண்டும்.

வேறு காரணங்களும் இருக்கலாம். உங்கள் குழந்தைக்கு என் ஏற்படுகிறது என்பதை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று உறுதிசெய்து கொள்ளுங்கள்.

குழந்தை அவசியம் சிகிச்சை பெற வேண்டும். காலதாமதம் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் உமிழ்நீர் சுரப்பை சீராக வைக்கலாம்.