குழந்தைகளுக்கு பனிக்கால பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பனிக்காலத்தில் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இதனால் சளி, இருமல், வைரஸ் காய்ச்சல், கொசு மூலம் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, வயிற்று போக்கு, மூச்சு தொற்று ஏற்படும்.

இவை பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியா தொற்று மூலம் பரவக்கூடியது.

தொடர் காய்ச்சல், சாப்பிட மறுத்தல், அதிக சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி, வயிற்றுபோக்கு அதிகமிருந்தால் கால தாமதமின்றி சிகிச்சை பெற வேண்டும்.

குழந்தைகளின் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

பழம், காய்கறி, கீரை, முட்டை, பால் போன்றவற்றை தினமும் கொடுக்க வேண்டும்.

நன்கு காய்ச்சிய நீரை சூடு குறைந்ததும் பருக கொடுக்க வேண்டும்.

உரிய நேரங்களில் 'இன்ப்ளூயன்சா' தடுப்பூசி போடுவதே குழந்தைகளுக்கு பாதுகாப்பு தரும்.