ஆஸ்டியோ போரோசிஸ் வருவதை தடுப்பது எப்படி?
எலும்பு சம்பந்தப்பட்ட நோயில் முக்கியமானது ஆஸ்டியோபோரோசிஸ். ஆஸ்டியோ என்றால் எலும்பு, போரோசிஸ் என்பது ஓட்டைகள்.
எலும்புகளுக்குள் இருக்கும் ஓட்டைகள் பெரிதாவதால் ஏற்படும் நோய் இது. மேலும் எலும்புத்தாது அடர்த்தி குறைவதாகும்.
எலும்பை குறுக்குவாட்டில் வெட்டிப் பார்த்தால், ஒன்றுடன் ஒன்று இணைந்த, கண்ணுக்குத் தெரியாத சிறு துகள்களுடன் தேனீ கூடு போன்று இருக்கும்.
இதனுள் கொலாஜன் என்ற ஜவ்வு நிறைந்த எலும்பு மஜ்ஜையும், ஆஸ்டியோன்ஸ் என்ற கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், செலினியம் என்ற நுண்ணுாட்டச் சத்தும் சேர்ந்து எலும்பு உருவாகிறது.
இது அதிக எலும்பு முறிவு ஏற்படுத்தும் நோய். அதிநவீன ஸ்கேன் மூலமே இதை கண்டுபிடிக்க முடியும்.
இதை தடுக்க 20 வயது முதல் எடை சுமத்தல், நீந்துதல், நடத்தல், உடல் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வளர் இளம் பருவத்தில் இருந்து ஊட்டச்சத்துள்ள கால்சியம், 'விட்டமின் டி' உணவுகளை உட்கொண்டால் முதுமையில் தடுக்கலாம்.