வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் புற்றுநோய் அபாயம்!

புற்று நோய்க்கு சிகிச்சை அளிக்க புதிய மருத்துவ முறைகளை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சித்துக் கொண்டு உள்ளனர்.

மனிதர்களைப் போலவே நம் வீட்டில் வளர்க்கும் ஐந்தறிவு ஜீவராசிகளும், புற்றுநோயால் பாதிக்கப்படுகிறது.

புற்றுநோயால் நாய்களும், மனிதர்கள் புற்றுநோய்க்குப் பாதிக்கப்படும் விகிதத்திற்கு சமமாகவே பாதிக்கப்படுகின்றன.

இதை ஒப்பிடும் பொழுது பூனைகள் பாதிக்கப்படும் அளவு சற்றுக் குறைவுதான்.

'லிம்போமா' என்ற புற்றுநோய் வகைதான் நாய்கள் மற்றும் பூனைகளின் இடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பொதுவாக நான்கில் ஒரு நாய் தனது வாழ்நாளில் ஏதோ ஒரு கட்டத்தில் அதன் உடலில் நியோப்ளசியா உருவாக்குகிறது.

நியோப்ளசியா என்பது திசுக்கள் மற்றும் செல்களின் அசாதாரண வளர்ச்சியைக் குறிப்பதாகும்.

உலகின் மொத்த நாய்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவை, தனது பத்து வயதைக் கடந்த பிறகுப் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகிறது.

புற்று நோயின் தாக்கம் அதிகரிக்கும் பொழுது வளர்ப்புப் பிராணிகளின் உடலில் கண்களுக்கு புலப்படும் அளவில்கட்டிகள் உருவாகும்.