குழந்தைகளுக்கு கண்புரை வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கண்புரை பிரச்னை என்பது பிறவியிலே குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

பெண்கள் கர்ப்பகாலத்தில் ஊட்டச்சத்து மிகுந்த ஆகாரங்களை சாப்பிடாமல் இருப்பது தான் இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அந்த நேரத்தில் சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

ரூபெல்லா தடுப்பூசியை முறையாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் ரத்தப்போக்கு ஏற்படாமல் இருக்க வேண்டும். கால்சியம் பற்றாக்குறை இல்லாமல் இருக்க வேண்டும்.

குழந்தைகள் பிறக்கும் போது கண்புரை இருப்பது கண்டறியப்பட்டால் விரைவில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகள் மன அழுத்தம் இல்லாமல் நன்றாக சாப்பிட்டு நலமாக இருந்தாலே வயிற்றிலிருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்புகள் வருவது குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர்.