கர்ப்ப காலத்தில் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் !

செரிமானத்திற்கு உதவுகிறது; வீக்கம் மற்றும் குமட்டலை குறைக்கிறது. குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது.

உடலில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றவும், கால்கள் மற்றும் கணுக்கால் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும்.

சீரகத்தண்ணீரில் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அவசியமான இரும்புச்சத்துகள் உள்ளன.

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது. உடலின் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

சீரகத்தண்ணீரை குடிக்கும் போது உடல் மட்டுமின்றி சரும ஆரோக்கியமும் மேம்படுகிறது.

இது அமிலத்தன்மை மற்றும் கர்ப்ப கால நெஞ்செரிச்சல் ஆகியவற்றைக் குறைக்கும். அதேவேளையில் அளவாக குடிக்க வேண்டும். டாக்டரிடமும் கலந்தாலோசிக்க வேண்டும்.

இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மேலும் குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.