பெண்களை பாதிக்கும் மார்பக புற்றுநோயிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?
தவறான பழக்கவழக்கங்களினால் வரும் புற்றுநோய்க்கு மாறுபட்டு, பெண்மையின் ஹார்மோன் அதிக சுரப்பினால் மார்பக புற்றுநோய் வருவதற்கு சாத்தியம் அதிகம் என கூறப்படுகிறது.
குடும்பத்தில் முன்னோர் யாருக்கேனும் இருக்கும்பட்சத்தில் 20 வயதிலும், இயல்பாக 35 வயது நிரம்பிய அனைவரும் தங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
மார்பகங்களில் கட்டிகள், வீக்கம், தோல் நிறம் மாறுதல், காம்புகளில் ரத்தம் வடிதல் போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்.
கட்டிகள் இருந்து வலி இல்லை என்றாலும் அஜாக்கிரதையாக இருக்க கூடாது என டாக்டர்கள் வலியுறுகின்றனர்.
வெட்கத்தால் வெளியில் சொல்லாமல் இருந்தால் நோய் அனைத்து இடங்களுக்கும் பரவி விடும்.
தற்போது நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டது. மெமோகிராம் பரிசோதனை, ஹீமோ தெரபி, ரேடியோ தெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் மூலம் பாதுகாப்பது எளிது.
இதில் சில வகைகளை தவிர 100க்கு 94 சதவீதம் குணமாக்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.