என்னால் எல்லாம் செய்ய முடியும்... விவேகானந்தரின் தன்னம்பிக்கையூட்டும் வரிகள் !

நீ தியாகம் செய்ய தயாராக இருந்தால் மட்டுமே, உலகிலுள்ள மற்றவர்களின் மனங்களை வெல்ல முடியும்.

வலிமையானவன் என நீ நினைத்தால், உண்மையில் வலிமையானவனாக மாறி விடுவாய்.

எதையும் தெரியாது என சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு வீரனை போல செயல்படு.

அன்பில் கரைந்து விடு. அது உன்னை சொர்க்கத்தில் சேர்த்து விடும்.

நமது பெருமையை பறைசாற்றுவதை விட உலகிற்கு நன்மை செய்வது வாழ்வின் குறிக்கோளாக இருக்கட்டும்.

இரக்கம் கொண்ட இதயம், சிந்திக்கும் திறன் படைத்த மூளை, வேலை செய்யும் கைகள், இவை மூன்றும் இருந்தால் சாதிக்கலாம்.

கீழ்ப்படிதலை அறிந்தவனே கட்டளையிடும் அதிகாரத்தையும் பெறுவான்.

பொறுமையைப் பின்பற்றினால் உலகம் உங்கள் காலடியில் கிடக்கும். பூமியைப் போல பொறுமையுடன் வாழுங்கள்.

என்னால் எல்லாம் செய்ய முடியும்' என தீர்மானமாக நம்புங்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள்.

மற்றவர் ஏளனத்தைப் பொருட்படுத்தாமல் கடமையைச் செய்வதில் கண்ணாக இருங்கள்.