கோடீஸ்வரர்கள் சராசரி 22% உயர்வு! வருமான வரி தாக்கலில் தகவல்!

கடந்த டிச.,31ல் 2025 - 26 மதிப்பீட்டு ஆண்டுக்கான வரி தாக்கல் நிறைவு செய்யப்பட்டது.

வரி தாக்கலுக்கு உதவும் இ - பைலிங் தளத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் குறித்து பார்ப்போம்.

கடந்த 2025- 26ம் நிதியாண்டில், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டுவோர் எண்ணிக்கை, 22 சதவீதம் உயர்ந்துள்ளது.

வரி தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை ஒரு சதவீத உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது.

ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

அதேவேளை, 5 லட்சத்துக்கு மேல் மற்றும் 10 கோடி ரூபாய்க்கு மேலும் வருமானம் ஈட்டியோரின் என்ணிக்கை, இரட்டை இலக்க வளர்ச்சியில் உள்ளது.

கறாரான வருமான வரி கணக்கீட்டு நடைமுறைகள், தரவுகளை விரிவாக அலசும் போக்கு, ஏ.ஐ.எஸ்., டி.டி.எஸ்., டி.சி.எஸ்., நடைமுறைகளால் வெளிப்படைத்தன்மை நிலவுவதாக நிதி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதன் விளைவாக, உயர் வருவாய் ஈட்டுவோர் முறையான வரி தாக்கல் நடைமுறைக்குள் வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.