நிறம் மாறும் சருமம் காஸ்மெடிக் சர்ஜரியில் சாத்தியமா?

நிறம் மாறும் சருமம் காஸ்மெடிக் சர்ஜரியில் சாத்தியமா?

மக்கள் மத்தியில் பிளாஸ்டிக் சர்ஜரிக்கும், காஸ்மெடிக் சர்ஜரிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சில சர்ஜரி, உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.

தலை முடி முதல் பாதம் வரை அழகு மேம்படுத்துவது, அமைப்பை சற்று மாற்றுவது, உடல் எடை குறைப்பது, நிறம் கூட்டுவது, பொலிவு ஏற்படுத்துவது என, அனைத்தும் மேற்கொள்ளலாம்.

காஸ்மெடிக் சர்ஜரியில் ஒரே மாதிரியான ஆப்ரேஷன் கிடையாது. ஒரு நபரின் எதிர்பார்ப்பு, உடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

100 % தீர்வு கிடைக்கும் என்று கூற முடியாது; 50 முதல் 60 % மட்டுமே உறுதியளிக்கப்படுகிறது.

சர்ஜரி செய்துது மட்டுமின்றி பராமரிக்க வேண்டியது அவசியம். முகப்பொலிவு, தலைமுடி போன்ற சில, பராமரிக்காவிடில் மீண்டும் பழைய நிலைக்கு சென்றுவிடும்.

கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. கட்டுப்பாடில்லாத நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

'குளூட்டத்தையான்' சிகிச்சை என்பது, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த செய்யப்படுகிறது. இது ஒரு மருத்துவ சிகிச்சை முறை; நரம்பு வழியாக மருந்து செலுத்தப்படுகிறது.

டாக்டர்கள் மட்டுமே இதை செய்ய வேண்டும். தவறாக செலுத்தினால், ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புண்டு.