குறட்டையைக் குறைக்க என்ன செய்யலாம்… இதோ டிப்ஸ்!

குறட்டை பொதுவாக தொண்டையில் அதிகம் சதை வளர்ந்து, அதனால் சுவாச குழாய்க்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுவதால் வரும்.

மேலும் தூங்கும்போது, மூளையால் சுவாசிப்பதைக் கட்டுபடுத்த முடியாமல் போவதாலும் வரலாம். குறட்டையை குறைக்க உதவும் பல உத்திகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளன. அவற்றை முயற்சி செய்தால் குறட்டையைக் குறைக்க முடியும்.

முதுகில் தூங்குவது குறட்டைக்கான வாய்ப்பை அதிகரிக்கும். குப்புறப் படுத்து உறங்குவதாலும் குறட்டை வரலாம். மூச்சு திணறலையும் ஏற்படுத்தலாம்.

அதனால் தலையணையின் உயரத்தை கொஞ்சம் அதிகரியுங்கள். மேலும் உங்கள் முகம் தலையணையின் உள்ள பக்கத்தில் படும் படி தூங்க முயற்சிக்கவும்.

அதுவும் படுக்கை அறை மிகவும் காற்றோட்டமாக இருந்தால் சுவாசிக்க எளிதாகும் என்பதால் குறட்டை வராமல் இருக்கும். மேலும் அறையும் குளுமையாக இருக்கும்.

அறையில் தூசு இருந்தாலும் குறட்டை ஏற்படும். அதனால் சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்.

தினமும் மூச்சுப் பயிற்சி, யோகா பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

குறட்டை சத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.