தர்பூசணியை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா?
கோடைக்கு இதமான தர்பூசணியில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பதால், உடலில் நீரேற்றமாக வைக்க உதவுகிறது.
இதில், லைகோபீன், ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
மிகக் குறைவான கலோரிகளே இருப்பதால், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது சிறந்ததாக உள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.
அதேவேளையில், தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாது என்பது நிபுணர்களின் அட்வைஸாகும்.
ஃபிரிட்ஜில் வைப்பதை விட, அறையில் சாதாரண வெப்பநிலையில் வைக்கப்படும் தர்பூசணியில் அதிக சத்துக்கள் இருப்பதாக அமெரிக்க வேளாண்மைத் துறையின் ஆய்வு கூறுகிறது.
மேலும், வெட்டப்பட்ட தர்பூசணியை ஃபிரிட்ஜில் வைக்கும்போது, அதில் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்புள்ளது.
எனவே, ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட தர்பூசணியை ஸ்மூத்தி அல்லது மில்க் ஷேக் வடிவில் சாப்பிடுவது நல்லது.