உடலில் தொடர்ந்து அரிப்பு வர காரணமும் தீர்வும்! 
        
பொதுவாக  தற்போது நிலவும் சீதோஷ்ண நிலைக்கு உடலில் அதிகம் வியர்க்கக்கூடிய பகுதிகளில் அரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
        
 ஒரு சிலருக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருந்தாலும் அரிப்பு ஏற்படும்.  
        
அரிப்பை தடுக்க எப்போதும் உடம்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். 
        
பூஞ்சை கிருமிகள் தாக்கினால் படர்தாமரை வர காரணமாக அமையும். 
        
எனவே இந்த காலகட்டதில் தினமும் இருவேளை குளிக்க வேண்டும்.  
        
உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் குடிப்பதுடன் இளநீர், மோர் போன்றவற்றையும் பருகலாம்.   
        
 மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப உணவு கட்டுப்பாடுகள் வேண்டும்.  ஒவ்வாமை ஏற்படுத்தும் கத்தரிக்காய், கருவாடு உள்ளிட்டவைகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.