இன்று தேசிய இளைஞர்கள் தினம் - சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார்.
இவரது பிறந்த தினம், தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. அவரின் பொன்மொழிகள் சில பார்ப்போம்!
தலைவனாக விரும்பினால் முதலில் தொண்டனாக இருந்து பழகுங்கள்.
லட்சியவாதியாக இருக்க விரும்பினால், வாழ்வில் துன்பத்தை ஏற்கத் தயாராக இருங்கள்.
எந்த வேலையையும் தனக்கு பிடித்ததாக மாற்றத் தெரிந்தவனே புத்திசாலி.
கடவுளை நம்புபவனை விட தன்னை நம்புபவனே மேலானவன்.
சுயநலம் இல்லாதவனுக்கு உலகமே சொந்தம். அவன் எல்லா உயிர்களிலும் தன்னையே பார்க்கிறான்.
மனதை சரியான வழியில் செலுத்தினால், உன்னைக் காப்பதோடு விடுதலைக்கும் வழிவகுக்கும்.
நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது.