இன்று தேசிய வாக்காளர் தினம்!
தேர்தல் ஆணையத்தின் 16வது வாக்காளர் தினம் இன்று (ஜன., 25 ம் தேதி) கடைபிடிக்கப்படுகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் 1950 ஜன. 25ல் தொடங்கப் பட்டது. தன்னாட்சி அதிகாரம் மிக்கது.
இதன் 60வது ஆண்டை சிறப்பிக்க 2011 ஜன. 25ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
இளம் வாக்காளர்களைத் தேர்தல் செயல்பாடுகளில் பங்கேற்க ஊக்குவிப்பதும், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
"எனது இந்தியா, எனது வாக்கு" (My India, My Vote) என்பது இந்த ஆண்டிற்கான கருப்பொருளாகும்.
கிராம ஊராட்சி தலைவர் முதல் பிரதமர் வரை மக்களே ஓட்டளித்து தேர்ந்தெடுக்கின்றனர். அதனால் வாக்கு அளிப்பதும், வாக்காளர்களும் மிகவும் முக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது.