இன்று உலக நிலா தினம்
அமெரிக்காவின் 'நாசா 1969 ஜூலை 16ல் அனுப்பிய அப்பல்லோ-11' விண்கலம் நிலவுக்கு சென்றது.
நிலவின் மேற்பரப்பில் விண்கலம் தரையிறங்கியதை உலகமே உற்று நோக்கியது.
இதில் கமாண்டர் நீல் ஆம்ஸ்ட்ராங், பைலட் மைக்கேல் காலியன்ஸ், பைலட் எட்வின் ஆல்ட்ரின் பயணித்தனர்.
அப்பல்லோ விண்கலம் ஜூலை 20ல் நிலவில் இறங்கியது. விண்கலத்தில் இறங்கி நிலவில் காலடி வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை படைத்தார்.
இதனை கொண்டாடும் விதமாக ஜூலை 20ம் தேதி சர்வதேச நிலவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த டிச., 9, 2021ல் மூன் வில்லேஜ் அசோசியேஷன் மற்றும் நிறுவனத்தில் உள்ள பல குழுக்கள் இத்தினம் குறித்து சமர்ப்பித்த முன்மொழிவினை ஐ.நா., அங்கீகரித்தது.
இத்தினம் நிலவின் நிலையான பயன்பாடு, ஆய்வு மற்றும் நிலவை சுற்றியுள்ள நடவடிக்கைகளின் ஒழுங்குமுறைகளின் தேவை ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்.