இன்று தேசிய மாம்பழ தினம்

மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழம். இங்கு இம்மரம் 5000 ஆண்டுக்கு முன் பயிரிடப்பட்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் பல வகைகள் உள்ளன. கிழக்கு ஆசியாவில் இருந்து மாம்பழம், உலகிற்கு பரவியது.

இந்தியா உட்பட சில நாடுகளில் இது பழம் மட்டுமல்ல. கலாசாரம், பாரம்பரியம், வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளது.

மாம்பழம் மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு பச்சை நிறங்களில் பழுக்கும். வடிவங்களும் வேறுபட்டிருக்கும். முன்னூறுக்கும் அதிகமான ரகங்கள் இதில் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்த வரையில் மியா, சாகி, காசா, அல்போன்சா, செந்தூரம், சப்போட்டா, பங்கனபள்ளி, மல்கோவா என 100க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் உள்ளன.

இதன் நன்மை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஜூலை 22ல் தேசிய மாம்பழ தினம் கடைபிடிக்கப்படுகிறது.

மாம்பழத்தில் புரதம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, பொட்டாசியம், மக்னீசியம் போன்ற பல சத்துக்களும் உள்ளன.

திருவிழாக்களிலும் சமயச் சடங்குகளிலும் மாமரத்தின் இலைகள் தோரணமாகக் கட்டப்படுகின்றன. மாம்பழத்தின் விதைகள் மருந்தாகவும் பயன்படுகிறது.

மாம்பழம் ஜூஸ், கேக், ஐஸ்கிரீம், ஊறுகாய் என உணவுகளை உருவாக்க பல வழிகளில் பயன்படுத்தப்படுகிறது.