இன்று உணவு பாதுகாப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 7ல் உலக உணவு பாதுகாப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பாதுகாப்பற்ற உணவுகளால் உலகில் ஆண்டுக்கு 60 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். 4.20 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி, ரசாயனப் பொருட்கள் கொண்ட பாதுகாப்பற்ற உணவு பலவித நோய்களை ஏற்படுத்துகிறது.

இது பொருளாதாரத்துக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. பாதுகாப்பற்ற உணவுகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து மக்கள் அறிய வேண்டும்.

எனவே உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'சுமையிலிருந்து தீர்வு - எங்கும் பாதுகாப்பான உணவு' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

அசுத்தமான உணவுகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் அதன் நீண்டகால ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கம்.