தனிமை, தாழ்வு மனப்பான்மை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும்!
தற்போது பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்கள் பலரும் மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடுவதால், ஆரோக்கியம் மட்டுமின்றி, எதிர்காலமும் கேள்விக்குறியாகிறது.
'ஆன்லைன்' மோகத்திலிருந்து குழந்தைகளை கவனமுடன் மீட்டெடுக்காவிட்டால், வீண் பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
மொபைல் போன்களில் கேம் விளையாடும் பழக்கம், 'ப்ரீ பிரன்டல் கார்ட்டெக்ஸ்' எனும் முடிவுகளை எடுக்கும், முன் மூளையை பாதிக்கிறது.
இது போன்ற குழந்தைகளுக்கு, 'சாப்பிடு, துாங்கு, படி, ஏன் ஸ்கூலுக்கு போக மாட்டேங்குற?' என்று எந்த அறிவுரை கூறினாலும் பிடிக்காது.
இது அவர்களின் மன உறுதியை பாதிக்கும்.
'எந்த வேலையையும் செய்யாமல், கேம்ஸ் ஆடுகிறோம். நம்முடைய தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டுகின்றனர்' என்பது அவர்களுக்கு புரியும்.
இது அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தக்கூடும்.
ஒரு கட்டத்தில் நாம் எதற்கும் லாயக்கில்லை என அவர்களுக்கு தோன்றும். தற்கொலை எண்ணம் வந்து விடும் என்பது மனநல ஆலோசகர்களின் அட்வைஸாகும்.
எனவே, படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், வீட்டு வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, இயல்பாக பல விஷயங்களை பேசுவது, மொபைல் போன் ஆர்வத்தை குறைக்கும்.