இந்த சீசனில் சுவைக்க மாங்காய் வடை ரெசிபி இதோ
தேவையானப் பொருட்கள்: துருவிய மாங்காய் - 1 கப், பச்சை மிளகாய் - 2, உளுத்தம் பருப்பு - 100 கிராம், கடலைப் பருப்பு - 100 கிராம், சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்.
இஞ்சி, உப்பு, கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை மற்றும் எண்ணெய் தேவையான அளவு.
உளுத்தம் பருப்பு, கடலை பருப்பை ஒரு மணி நேரம் நீரில் ஊற வைத்து, இஞ்சி சேர்த்து, மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
இந்த விழுதுடன், துருவிய மாங்காய், நறுக்கிய பச்சை மிளகாய், சோம்பு, உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் தேவையான எண்ணெய் விட்டு சூடானவுடன், பிசைந்த மாவை வடையாக தட்டிப் போட்டு பொறிக்கவும்.
இரு பக்கமும் நன்றாக வேக விட்டு பொன்னிறத்தில் எடுத்தால், இந்த சீசனுக்கு சுவைக்க சுவையான மாங்காய் வடை ரெடி.