இன்று உலக தூக்க தினம்!

உலக தூக்க தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இரண்டாவது முழுமையான வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இன்றைய மாடர்ன் உலகில் ஸ்மார்ட்போன் வருகைக்குப் பின்னர் நாம் தூங்கும் நேரம் கணிசமாகக் குறைந்துவிட்டது.

தூக்கத்தின் முக்கியத்துவம் அறியாமல் நாம் இரவு ஸ்மார்ட்போனில் பல மணிநேரம் செலவழித்து தூக்கத்தை கெடுத்துக் கொள்கிறோம்.

கடந்த நூறு ஆண்டுகளில் மனிதன் தூங்கும் நேரம் என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

தூக்கமின்மையால் அல்சைமர், இன்சோம்னியா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் தூக்கம் என்பது மிக மிக அவசியம். நடுத்தர வயது இளைஞர்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் எட்டு மணி நேரம் தூங்கவேண்டியது அவசியம்.

நன்றாக உறங்குவோம், சிறப்பாக வாழ்வோம் என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.