இன்று உலக காச நோய் தினம்!
காசநோய் பரவும் முறை, தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் மார்ச் 24ல் உலக காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 2024ல் 1.07 கோடி பேர் காசநோயால் பாதிக்கப்பட்டனர். 12.30 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2000ல் இருந்து இதுவரை 8.30 கோடி பேர் காசநோயிலிருந்து காப்பாற்றப்பட்டனர்.
2030க்குள் தொற்றுநோயில் இருந்து காசநோயை விடுவிக்க ஐ.நா., திட்டமிட்டுள்ளது.
'ஆம் நம்மால் காசநோயை ஒழிக்க முடியும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
'டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா' நுண்கிருமிகளால் காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது பொதுவாக நுரையீரலை பாதிக்கும்.
ஆனாலும் மூளை, கிட்னி, முதுகெலும்பு ஆகிய உடலின் மற்ற பாகங்களையும் பாதிக்கிறது.
தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை அறிகுறிகள்.
நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது.
காச நோய் உள்ளவர்கள், தயங்காமல் மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.