இன்று தேசிய பல் மருத்துவர் தினம்!

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 6ம் தேதி இந்தியாவில் "தேசிய பல் மருத்துவர் தினம்" கொண்டாடப்படுகிறது.

மனித உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்று பற்கள்.

உணவை மெல்லுதல், பேசுதல், புன்னகை உட்பட பல வழிகளிலும் பயன்படுகிறது.

பல் சுத்தம், வாய் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் பல் மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பல் கூச்சம், எனாமல் பாதிப்பு, சொத்தை பல், இப்படி பல பிரச்னைகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் காணப்படுகிறது.

அதிகரித்து காணப்படும் பலவித பல் பிரச்னைகளைத் தவிர்க்கும் முறைகள் குறித்து மருத்துவர்கள் இத்தினத்தில் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.